100 cc கொண்ட TVS - XL ரூ.29,539 விலையில் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது

TVS  நிறுவனம் சில நாட்களுக்கு  முன்பு உத்திரபிரதேசத்தில் 100 cc என்ஜின் கொண்ட XL மாடலை வெளியிட்டது. தற்போது இந்த 100 cc என்ஜின் கொண்ட XL மாடல்  ரூ.29,539 ஷோ ரூம் விலையில் தமிழ் நாட்டிலும் வெளியிட்டுள்ளது. TVS XL மாடல் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்றும் மக்களின் ஆதரவையும் பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TVS நிறுவனம் கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க அதிக திறன் கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது.

இதன் 100 cc என்ஜின் 4.2 Bhp திறனையும் 6 Nm இழுவைதிறனையும் வழங்கும். இது லிட்டருக்கு 67 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் பச்சை, ப்ளூ, சிவப்பு, கிரே மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.