விரைவில் வெளியிடப்படும் டார்க் T6X எலக்ட்ரிக் மோட்டார் பைக்

டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் இந்தியாவில் T6X எனும் எலக்ட்ரிக் மோட்டார் பைக் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஒரு முழுமையான சார்ஜுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகம் வரையும் செல்லும்.

டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆட்டோ மொபைல் துறையில் பெயர்பெற்ற நிறுவனம் இல்லை என்றாலும் ரேஸிங் துறையில் சற்றே பெயர்பெற்ற நிறுவனம். தற்போது  டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக்  மோட்டார் பைக் துறையில் கால் பாதிக்க உள்ளது.  T6X எனும் எலக்ட்ரிக் மோட்டார் பைக் மூலம் எலக்ட்ரிக் பைக் துறையில் நுழைய உள்ளது. இந்த மாடல் 125cc என்ஜினுக்கு நிகரான செயல்திறன் கொண்டதாக இருக்கும். எனினும் இந்த மாடலின் செயல்திறன் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதலில் T6X மாடலை பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் மட்டும் வெளியிட உள்ளது. அதை தொடர்ந்து சார்ஜிங் ஸ்டேஷன்களையும் தொடங்க உள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.