வெளிப்படுத்தப்பட்டது புதிய கருப்பு நிற ட்ரியம்ப் போன்வில்லே பாபர்

ட்ரியம்ப் நிறுவனம் முழுவதும் கருப்பு நிறம் கொண்ட புதிய போன்வில்லே பாபர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் புதிய கருப்பு நிறமும் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.  அதன் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

இந்த புதிய மாடலில் சாதாரண மாடலை விட பெரிய சிறிய வீலும் பெரிய டயரும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 130 வரையிலான கஷ்டம் உபகரணங்களும் கிடைக்கும். முன்புறத்தில் 310 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 255 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் ஸிஸ்டெமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் போனவில்லே T120 மாடலில் உள்ள அதே 1200 cc பேரலல் ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 77 Bhp திறனையும் 106 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ரோடு மற்றும் ரெயின் என இரண்டு டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.