ட்ரியம்ப் போன்வில்லே T120 மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

ட்ரியம்ப் நிறுவனம் போன்வில்லே T120 மாடலின் முன்பதிவை தொடங்கியது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியிலேயே  வெளியிடப்பட்டது ஆனால் தற்போது தான் இதன் முன்பதிவே தொடங்கப்படுகிறது. இந்த மாடல் ரூ. 8.7 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் கிடைக்கும்.

இந்த மாடல் பழமையான மாடல்களின் வடிவங்களை குறிப்பாக 59 போன்வில்லே மாடலின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு பழமையாக இருந்தாலும் ABS, என்ஜின் இம்மொபிளைசர், டிராக்சன் கண்ட்ரோல், DRL  முகப்பு விளக்கு, சார்ஜிங் போர்ட் மற்றும் பல அடுத்த தலைமுறைக்கு ஏற்ற உபகரணங்கள் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 1200 cc  கொண்ட பேரலல்  ட்வின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 Nm  இழுவைதிறனை வழங்கும். முந்தய மாடலுடன் ஒப்பிடும் பொது இது 54% அதிக செயல்திறன் கொண்டது. மேலும் இந்த மாடல் மிகச்சிறந்த கையாளுமையையும் ஓட்டுதல் அனுபவத்தையும் தரும். நீண்ட தூர பயணத்திற்கு சிறப்பானாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.