பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிடப்படும் UM ரெனெகட் கமாண்டோ

இறுதியாக UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரெனெகட் கமாண்டோ  பிப்ரவரி 3 ஆம் தேதி என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 223 cc மற்றும் 149 cc என இரண்டு விதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் சில மாடல்களை காட்சிக்கு வைக்கும்.

UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பைக்குகளை  வெளியிட இருக்கிறது. உத்தரகண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவன ஆலையில் இந்த மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மற்ற மாடல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ராயல் என்ஃபீல்ட்  மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.