வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு யமஹா FZ-S FI

யமஹா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு FZ-S FI மாடலை ரூ 86,042 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், பின்புறத்தில் புதிய டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம்  FZ-S மாடல் வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்த 2018  ஆம் ஆண்டு மாடலை வெளியிட்டுள்ளது. 

யமஹா நிறுவனத்தின் புதிய 2018 ஆம் ஆண்டு வெர்சன் FZ-S FI மாடலில் புதிய கிராபிக்ஸ், புதிய அலாய் வீல், புதிய பக்கவாட்டு கண்ணாடி மற்றும் புதிய 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பின்புற டிஸ்க் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் புதிய ப்ளூ வண்ணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எத மாற்றமும் இல்லை, அதே 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின்  13.1 bhp (8000rpm)   திறனும் 12.8 NM (6000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 57 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் ஹோண்டா CB ஹார்னெட் மற்றும் சுசூகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் யமஹா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஃபேஸர் மாடலையும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.