ரூ 20.73 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா YZF-R1

யமஹா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு YZF-R1 மாடலை ரூ 20.73 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட குயிக் ஷிப்ட் சிஸ்டம் (QSS) மற்றும் லிப்ட் கன்ட்ரோல் சிஸ்டம் (LIF) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட சேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைக்கின் எடை அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 998 cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  200.0 bhp (13500rpm)   திறனும் 112.4 NM (11500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த திறன் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது.

இந்த புதிய யமஹா YZF-R1 மாடல் கருப்பு மற்றும் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் கவாஸாகி ZX-10R, ஹோண்டா CBR1000R மற்றும் சுசூகி GSX-R1000 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.