ரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15

யமஹா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேக்ட் பைக் வடிவமைப்பிலான MT-15 மாடலை ரூ 1.36 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் யமஹா YZF-R15 V3.0 மாடலின் நேக்ட் பைக் வடிவமைப்பிலான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் YZF-R15 V3.0 மாடலை விட ரூ 3,350 குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் MT-09 மற்றும் MT-10 மாடல்களிலிருந்து சில வடிவமைப்புகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ட்ரான்ஸ்பார்மர்ஸ் போன்ற LED முகப்பு விளக்குகள், பின்புற LED விளக்குகள் என சிறப்பான வடிவமைப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் யமஹா YZF-R15 V3.0 மடலில் உள்ள அதே 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் முறையே 282mm மற்றும் 220mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலில் சிங்கிள் சேனல் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.