ரூ 59,000 விலையில் வெளியிடப்பட்டது யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிசன்

யமஹா இந்தியா நிறுவனம் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிசன் மாடலை ரூ 59,000 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ZR ஸ்ட்ரீட் ரேலி எடிசன் மாடல் சாதாரண மாடலை விட ரூ 2000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய ZR ஸ்ட்ரீட் ரேலி எடிசன் மாடலில் புதிய கிராபிக்ஸ், புதிய ஹேண்ட் கார்டு, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி மாற்றங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த மாடல் ப்ளூ மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே  113cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  7.1 bhp (7500rpm)  திறனும் 8.1 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 66 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது . இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிகபட்சமாக 80 முதல் 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.