ரூ.46,400 விலையில் வெளியிடப்பட்டது யமஹா சலுடோ RX

யமஹா நிறுவனம் புதிய சலுடோ RX மாடல் மூலம் மீண்டும் 100 cc  செக்மெண்டில் நுழைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் மிகக்குறைந்த விற்பனை காரணமாக சில 100 cc பைக் மாடல்களை நிறுத்தியது யமஹா நிறுவனம். தற்போது 100 cc  கொள்ளளவு என்ஜின் கொண்ட சலுடோ RX  மாடலை ரூ.46,400 டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது.

யமஹா என்றாலே பெர்பாமன்ஸ் என்பதை மாற்றி இந்த மாடலை அதிக மைலேஜ் கொண்ட மாடலாக வடிவமைத்துள்ளது. ஏனெனில் 100 cc  செக்மெண்டில் செயல்திறனை விட அதிக மைலேஜ் கொண்ட பைக்குகளுக்கு தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்த மாடலில் 110 cc  கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 7.5 Bhp  திறனையும் 8.5 Nm  இழுவைதிறனையும் வழங்கும்.  இந்த மாடல் 82 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் ப்ளூ, கருப்பு, கிலேமிங் கருப்பு  மற்றும் சிவப்பு என   மொத்தம் நான்கு விதமான வண்ணங்களில் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.