டியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்

கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் ஜாவா பைக்குகளை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் ஜாவா, ஜாவா 42 மற்றும் பாபர் வடிவமைப்பிலான பெராக் என மூன்று மாடல்கள் முறையே ரூ 1.64 லட்சம், ரூ 1.55 லட்சம் மற்றும் ரூ 1.89 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இந்த மாடல்கள் சிங்கிள் சேனல் ABS பிரேக் உடன் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த மாடல்களின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் இதன் டெலிவரி பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜாவா மாடல்கள் தற்போது டியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ  8,942 அதிகமாக  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் முன்பதிவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களும் இந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம், அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் டியூவல் சேனல் ABS பிரேக் கொண்ட மாடல்களின் விநியோகம் ஜூன் மாதம் தான் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் மஹிந்திரா மோஜோ மாடலில் உள்ள 293CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட், BSVI மாசுக்கட்டுப்பாட்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் அப்படியே கிளாசிக் ஜாவா பைக் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிங்கிள் சேனல் ABS பிரேக் கொண்ட ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் முன்புறம் ABS உடன் கூடிய 280mm டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153mm ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. டியூவல் சேனல் ABS பிரேக் கொண்ட மாடல்களின் பின்புற டிஸ்க் பிரேக் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.