3.45 கோடி விலையில் பெர்ராரி கலிபோர்னியா டி இந்தியாவில் வெளியிடப்பட்டது

3.45 கோடி விலையில் பெர்ராரி கலிபோர்னியா டி மாடலை இந்தியாவில் வெளியிட்டு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது பெர்ராரி நிறுவனம். மேலும் முதலில் டெல்லி மற்றும் மும்பையில் ஷோ ரூம்களை தொடங்க இருக்கிறது. அதன் பிறகு மற்ற நகரங்களிலும் படிபடியாக ஷோ ரூம்கள் தொடங்கப்படும் என தெரிகிறது. 

பெர்ராரி கலிபோர்னியா டி மாடலில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ V 8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 552 bhp திறனையும் 755 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் உள்ள வேரியபுல் பூஸ்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஒவ்வொரு கியர் ருக்கு ஏற்றவாறு இழுவைதிறனை மாற்றி கொடுக்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மேலும்   இந்த   மாடல்  அதிக பட்சமாக  314 கிலோமீட்டர்  வேகம் வரையும் செல்லும்.

உட்புறம் 6.5 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஸ்பீக்கர் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் உள்ள மடங்கக்கூடிய மேற்கூரை  14 வினாடிகளில் மடங்கிவிடும். 

பெர்ராரி நிறுவனத்தின் மற்ற மாடல்களின் ஷோரூம்  விலை விவரம்:
பெர்ராரி கலிபோர்னியா டி - ரூ. 3.45 கோடி 
பெர்ராரி 488 GTB - ரூ. 3.99 கோடி
பெர்ராரி 458 ஸ்பைடர்  - ரூ. 4.22
கோடிபெர்ராரி 458 ஸ்பெஷல்  - ரூ. 4.4 கோடி
பெர்ராரி F 12 பெர்லினெட்டா - ரூ. 4.87 கோடி  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.