3 புதிய ஷோ ரூம்களை சென்னையில் தொடங்கியது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் மூன்று உலகத்தரம் வாய்ந்த ஷோரூம்களை சென்னையில் இன்று தொடங்கியது. டைட்டானியம் மோட்டார் நிறுவனம் இந்த மூன்று ஷோரூம்களையும் தொடங்கியது.  துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் அண்ணா சாலை ஆகிய மூன்று  இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்குள் 15 புதிய மாடல்களையும் 15 புதிய ஷோ ரூம்களையும் இந்தியாவில் 15 in 15 என்ற கொள்கையின் அடிப்படையில்  வெளியிட உள்ளது.

துரைப்பாக்கத்தில் உள்ள டீலர்ஷிப் ஷோ ரூம்  25000 சதுர அடி கொண்டது. மேலும் 15 கார்கள் வரை பார்வைக்கு வைக்க முடியும். 

அண்ணா சாலையில் உள்ள ஷோ ரூமில் புதிய கார் விற்பனை, புதிய உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் கடன் தொடர்பான நிதி நிறுவனங்கள் ஆகியவை இங்கு கவனிக்கப்படும்.

பெருங்குடியில் உள்ள சர்வீஸ் சென்டர் 45000 சதுர அடி கொண்டது. இந்த சர்வீஸ் சென்டரில் ஒரே சமயத்தில் 27 கார்களை பழுது பார்க்க முடியும். மேலும் வருடத்திற்கு 6000 கார்கள் வரை பழுது பார்க்க முடியும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.