மாருதி சுசுகி - S கிராஸ் SX4

2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் சுசுகி நிறுவனத்தால் S கிராஸ் SX4 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது SX4 மாடலின் அடிப்படியில் உருவாக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் என்றாலும் தோற்றத்தில் முழுமையான SUV  போல் தோற்றமளிக்கிறது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும்.

இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதால் பிளாஸ்டிக் கிலாடிங்குகள், அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

உட்புறமும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விதமான உபகரணங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வெளியிடப்படும். இதன் பெட்ரோல் என்ஜின் 120 bhp திறனும் 156 Nm இழுவை திறனும் கொண்டது மற்றும் டீசல் என்ஜின் 120 bhp திறனும் 320 Nm இழுவை திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 9 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.