வருகிறது ஸ்கார்பியோ ஆட்டோமேடிக்

இந்தியாவில் மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற மகிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் என இரண்டிலும் கிடைக்கும். மேலும் டாப் வேரியண்டில் மட்டும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் மாடல் ஹுண்டாய் க்ரேடா மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.