மேம்படுத்தப்பட்ட செவ்ரொலெட் - என்ஜாய் மாடல் வெளியிடப்பட்டது

ஜெனரல் மோட்டார் இந்திய நிறுவனம் மேம்படுத்தப்பட்ட செவ்ரொலெட் - என்ஜாய் மாடலை வெளியிட்டது. வெளிப்புற தோற்றத்தில் சொல்லும்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக ஸ்டீரிங் வீல் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் குரோம் பூச்சுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 100.2bhp (6000 rpm) திறனும் 131Nm (4400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74.8bhp (4000 rpm) திறனும் 172.5Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட 1.3 லிட்டர் டீசல்  எஞ்சினில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.