நிசான் மைக்ராவின் லிமிடெட் எடிசன் மாடல்

நிசான் இந்தியா நிறுவனம் மைக்ரா மாடலின்  ஐந்து ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மைக்ராவின் லிமிடெட் எடிசன் மாடல் வெளியிட்டது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும் (CVT ) கிடைக்கும்.

XV வேரியண்டில் மட்டும் கிடைத்த ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் (CVT ) XL வேரியன்டிலே கிடைக்கும். மேலும் இந்த மாடல் 750 எண்ணிக்கையில் மட்டும் தயாரிக்கப்படும் என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்புறத்தில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.