வெளியானது ஹோண்டா - ஜாஸ்

ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய ஜாஸ் மாடல் 5.3 லட்சம் ஆரம்ப விலையில்  வெளியிடப்பட்டது. இந்த மாடல் புதிய மற்றும் மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முன்புற கிரில், பனி விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்ளர், பார்கிங் கேமரா, பார்கிங் சென்சார் என அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

உட்புறம் கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவை  மற்றும் கருப்பு  என இரண்டு விதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் உட்புறம் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும்.

இந்த மாடலின் வேரியன்ட் வாரியாக அணைத்து விதமான விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=25&car_model=106


மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.