மாருதி சுசுகி - S கிராஸ் மாடலின் முன்பதிவு ஆரம்பம்

மாருதி சுசுகி - S கிராஸ்  மாடலின் முன்பதிவு அணைத்து ஷோரூம்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாடல் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் மேலும் இந்த மாடல் மாருதி சுசுகியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. நெக்ஸா ஷோரூம் என்பது மாருதியின் ப்ரீமியம் கார்களுக்கான பிரத்தியேகமான ஷோரூம் ஆகும். அடுத்த சில வாரங்களில் 30 ஷோரூம் திறக்கப்படுமம்.

இந்த மாடல் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா  என 7 வேரியண்டுகளிலும் ப்ரௌன், ப்ளூ, சில்வர், வெள்ளை மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.