ஜூலை 22 வருகிறது மேம்படுத்தப்பட்ட மகிந்திரா தார்

மகிந்திரா நிறுவனம் இந்தியாவின் சிறந்த ஆப் ரோடு மாடலான தாரின் மேம்படுத்தப்பட்ட மாடலை ஜூலை 22 அன்று வெளியிடுகிறது. வெளிப்புறத்தில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

உட்புறத்தில் தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.மகிந்திரா பொலிரோ மாடலில் உள்ள  ஸ்டீரிங் வீல், கியர் லிவர் ஆகியவை  இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குளிரூட்டி வென்டுகளில் சில்வர் பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. 

பழைய மாடலில் உள்ள கம்பீரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. அதே  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர் டீசல் என்ஜினில் CRDe மற்றும் DI என இரண்டு விதங்களில் கிடைக்கும். விலையிலும் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.