மீண்டும் வருகிறது மசராட்டி

மசராட்டி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குகிறது. இந்நிறுவனம் ஒரு சில மாதங்களில் 3 ஷோரூம் களை மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் திறக்க உள்ளது.

மசராட்டி நிறுவனம் இந்தியாவில் கிப்ளி , குவாட்ரோபோர்ட் டீசல், க்ரன் டூரிஸ்மோ, க்ரன் கேப்ரியோ மற்றும் குவாட்ரோபோர்ட் GTS ஆகிய 5 கார்களை வெளியிடுகிறது. இதன் முன்பதிவு கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் வெளியிடப்படும் மசராட்டி கார்களின் தோராயமான விலை:-

மசராட்டி கிப்ளி  - ரூ.1.1 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் டீசல் - ரூ.1.5 கோடி 

மசராட்டி க்ரன் டூரிஸ்மோ - ரூ.1.8 கோடி 

மசராட்டி க்ரன் கேப்ரியோ - ரூ.2.0 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் GTS - ரூ.2.2 கோடி 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.