மேம்படுத்தப்பட்ட டொயோடா - ஃபார்சுனர் வெளிவந்தது

டொயோடா நிறுவனம் அதிகரப்போர்வமாக மேம்படுத்தப்பட்ட ஃபார்சுனர் மாடலை வெளியிட்டது. இந்த மாடல் 2016 ஆம் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்கக்கப்படுகிறது. எனினும் கண்டிப்பாக 2016 ஆம் ஆண்டு வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என  எதிர்பார்கக்கப்படுகிறது.

முன்புற கிரில் பின்புற விளக்குகள் என வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் பொது LC ப்ராடோ போன்ற தோற்றமளிக்கிறது. பகல் நேரத்துள் ஒளிரும் LED விளக்குகள் என அதிக உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றுப்பை, தானியங்கி குளிரூட்டி, முகப்பு விளக்குகள், ஆன்டி லாக் ப்ரேக் என அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில்  2.8 லிட்டர் டீசல் என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்கக்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 177 bhp திறனும் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 420 Nm இழுவைதிறனும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 450 Nm இழுவைதிறனும் தரும் என எதிர்பார்கக்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.