மாருதி சுசுகி எர்டிகாவின் பேசியோ எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல் வெளியிடப்பட்டது

மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சில காஸ்மெடிக் வேலைப்பாடுகளையும் சில உபகரணங்களையும் சேர்த்து பேசியோ எக்ஸ்ப்ளோர் எடிசன் உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பாடி ஸ்டிக்கர், D- பிள்லரில் கருப்பு வண்ண ஸ்டிக்கர், பின்புற ஸ்பாய்லர் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். 

இதன் உட்புறத்தில் குளிரும் பெட்டி, மேட், இருக்கை கவர்  ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் VXi/VDi மற்றும் ZXi/ZDi வேரியண்டுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. அதே  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர்    பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலேயே கிடைக்கும் .இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மற்றும் இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.