மாருதி சுசுகி - நெக்ஸா ஷோரூமை ஜூலை 23 தொடங்குகிறது

இறுதியாக மாருதி சுசுகி நிறுவனம் தனது விலை உயர்ந்த கார்களுக்கான நெக்ஸா ஷோரூமை ஜூலை 23 தொடங்குகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட ஷோரூம்கள் ஜூலை 23 அன்று தொடங்கப்படும் என தெரிகிறது. வரும் காலங்களில் 100 ஷோரூம்களுக்கு மேல் திறக்கப்படும் எனவும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

8 லட்சத்திற்கு அதிகமான விலை உள்ள கார்கள் மட்டும் இந்த ஷோரூம்கள் வாயிலாக விற்கப்படும். S - கிராஸ் கார் தான் இந்த ஷோரூம்கள் வாயிலாக விற்க மற்றும் வெளியிடப்படும் முதல் கார். அதன் பிறகு சியாஸ் காரும் இந்த ஷோரூம்களுக்கு மாற்றப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.