மாருதி சுசுகி - S கிராஸ் மற்றும் வேகன் R ஆட்டோமேடிக் மாடல்களின் வெளியீட்டு தேதிகள்

மாருதி சுசுகி - S கிராஸ்:

மாருதி சுசுகி - S கிராஸ்  மாடலின் முன்பதிவு அனைத்து ஷோரூம்களிலும் ஆரம்பிக்கப்பட்ட  நிலையில்  இந்த மாடல் ஆகஸ்ட் முதல் வாரம்  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மாருதி சுசுகியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. நெக்ஸா ஷோரூம் என்பது மாருதியின் ப்ரீமியம் கார்களுக்கான பிரத்தியேகமான ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா  என 7 வேரியண்டுகளிலும் ப்ரௌன், ப்ளூ, சில்வர், வெள்ளை மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் பற்றிய எந்த ஒரு தகவலும்  இது வரை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிடவில்லை பெரும்பாலும் பெட்ரோல் மாடல் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த மாடல் ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசான் டெர்ரானோ மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் 8 முதல் 12 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகன் R மற்றும் ஸ்டிங்ரே ஆட்டோமேடிக்:

மேலும் மாருதி சுசுகி நிறுவனம் செளிரியோ மற்றும் ஆல்டோ K10 ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  மாடல்களின் வெற்றியை தொடர்ந்து வேகன் R  மற்றும் ஸ்டிங்ரே மாடல்களின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்  மாடல்களை வெளியிட இருக்கிறது.

செளிரியோ, ஆல்டோ K10, வேகன் R  மற்றும் ஸ்டிங்ரே ஆகிய நான்கு மாடல்களிலும் 998 CC கொள்ளளவு கொண்ட 1 லிட்டர் K10 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  வேகன் R  மற்றும் ஸ்டிங்ரே மாடல்களின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 4.5 முதல் 5.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.