8.74 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹுண்டாய் - க்ரெடா

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காம்பேக்ட் SUV செக்மெண்டில் 8.74 லட்சம் ஆரம்ப விலையில் இன்று  ஹுண்டாய்  வெளியிட்டிருக்கும்  மாடல் க்ரேடா. இந்த மாடலுக்கன பெயரை சில நாட்களுக்கு முன்பு தான் ஹுண்டாய் நிறுவனம் அறிவித்தது. இது ஏற்கனவே சீனாவில் iX 25 என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது.   

வெளிப்புறம் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் பார்பதற்கு ஹுண்டாய் சான்டா ஃபி போலவே தோற்றமளிக்கிறது. இது ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஃபோர்டு  ஈகோஸ்போர்ட் மாடல்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்ளர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மடல் தொடர்பான அணைத்து தொழில்நுட்ப விவரங்கள், ஷோவ்ரூம் மற்றும் ஆன் ரோடு விலை ஆகியவைகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=12&car_model=107

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.