வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மகிந்திரா - தார் (Mahindra -Thar)

மகிந்திரா நிறுவனம் இந்தியாவின் சிறந்த ஆப் ரோடு மாடலான தாரின் (Mahindra -Thar) மேம்படுத்தப்பட்ட மாடலை நேற்று (ஜூலை 22) வெளியிட்டது.  வெளிப்புறத்தில்  புதிய பம்பர், புதிய முகப்பு விளக்குகள், புதிய வீல் ஆர்சுகள், புதிய பக்கவாட்டு கால் படிகள், புதிய கூரை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் புதிய குளிரூட்டி, புதிய ஸ்டீரிங் வீல், புதிய கியர் லிவர் மற்றும் புதிய கருப்பு, புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்  மற்றும் பீஜ் வண்ணகலவையிலான டேஸ் போர்டு என முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்தில் அதிக பாகங்கள் மகிந்திரா பொலிரோ மாடலில் இருந்து எடுத்து  பயன்படுத்தப்பட்டுள்ளது.  

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த மாடல் CRDe என்ஜினில் மட்டும் தான் கிடைக்கும் Di என்ஜினில் கிடைக்காது. ஏனெனில் தார் மாடலின் மொத்த  விற்பனையில் 75 சதவீதம் CRDe எஞ்சின் மாடல் விற்பனை ஆவதால் மேம்படுத்தப்பட்ட மாடல் CRDe என்ஜினில் மட்டும் கிடைக்கும் என மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மாடல் அதே வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ் மற்றும் சிவப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது. மேலும் இந்த மாடல் 8.3 லட்சம் ஷோ ரூம் விலையில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.