ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காரின் முன்பதிவு ஜூலை 27 முதல் ஆரம்பம்

ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர்  காரின் முன்பதிவு ஜூலை 27 முதல் ஆரம்பிக்கப்படும் என ஃபோர்டு  நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காரை முன்பதிவு செய்ய 30,000 முன் பணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.


ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களால் மிகவும் விரும்பப்படும் காம்பேக்ட் செடான் செக்மெண்டில் ஃபோர்டு  நிறுவனம் வெளியிடும் மாடல். வெளித்தோற்றத்தில் ஒரு முழுமையான செடான் போல தோற்றமளிக்கிறது. ஃபோர்டு  மாடலில் பயன்படுத்தப்படும் முன்புற கிரில் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உட்புறம் ஈகோஸ்போர்ட் மற்றும் ஃபியஸ்டா மாடலில் உள்ள பாகங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  முன்புறத்தில் இரண்டு பக்கவாட்டில் நான்கு என மொத்தம் ஆறு காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.2 மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீஸல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மாடலில்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும்   கிடைக்கும். 

இந்த மாடல் கிரே, சிவப்பு , கோல்ட்,  வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் கருப்பு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல்  எஞ்சினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  18.36 Kmpl  மைலேஜும் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சினின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  17 Kmpl  மைலேஜும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 25.83 Kmpl  மைலேஜும்  தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.