SUV மற்றும் MPV என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது செவ்ரொலெட்

செவ்ரொலெட் நிறுவனம் இன்று  டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்பின் MPV மற்றும் ட்ரையல்பிளேசர் SUV ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. 

ட்ரையல்பிளேசர் SUV மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 193 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடன் கிடைக்கும். இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் எனவும் மேலும் 20 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பின் MUV மாடல் செவ்ரொலெட் என்ஜாய் MPV மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் ரெனால்ட் லாட்ஜி, மாருதி எர்டிகா மற்றும் ஹோண்டா மொபிலியோ மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் 8 முதல்12 லட்சம் விலையில் வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த இரண்டு மாடல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு முதல் அரை ஆண்டுக்குள் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.