மகிந்திரா நிறுவனம் TUV 300 என்ற புதிய SUV மாடலின் வரைபடத்தை வெளியிட்டது

மகிந்திரா நிறுவனம் U301 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த SUV மாடலின் பெயரையும் வரைபடத்தையும் வெளியிட்டது. இந்த மாடலின் பெயரை TUV 300 என்று அறிவித்துள்ளது. இதை டி யு வி த்ரீ ஒ ஒ என்று உச்சரிக்க வேண்டும். 

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான  நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல்  புத்தம் புதிய  1.5 லிட்டர் mHawk டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் அதிக செயல்திறன் கொண்ட என்ஜினாக இருக்கும். மேலும் இந்த என்ஜின் 100 bhp திறனை அளிக்கும். இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

மகிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மேம்படுத்தப்பட்ட XUV 500, மேம்படுத்தப்பட்ட தார் மற்றும் ஸ்கார்பியோ ஆட்டோமேடிக் ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மாடல் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.