S500 coupe, S63 AMG coupe மற்றும் G63 AMG ஆகிய மூன்று மாடலை வெளியிட்டது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் S 500 coupe , S 63 AMG coupe மற்றும் G 63 AMG ஆகிய மூண்டு மாடல்களை வெளியிட்டது.ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 6 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் இன்று  3 மாடல்களை வெளியிட்டது.

S 500 coupe மாடலில் 4.6 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 455 bhp திறனும் 700 Nm இழுவைதிறனும் கொண்டது. 

S 63 AMG coup மாடலில் 5.5 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 585 bhp திறனும் 900 Nm இழுவைதிறனும் கொண்டது. 

G 63 AMG  மாடலில் 5.5 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 536 bhp திறனும் 760 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் புதுமையான 5 வண்ணங்களில் கிரேசி கலர்ஸ் எனப்படும் லிமிடெட் எடிசனில் கிடைக்கும். 

அனைத்து மாடல்களும் 4 MATIC எனப்படும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டதுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து மாடல்களும் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடனும் கிடைக்கும்.

டெல்லி ஷோரூம் விலை விவரம் :

மெர்சிடிஸ் S 500 coupe - ரூ. 2 கோடி 

மெர்சிடிஸ் S 63 AMG coupe - ரூ. 2.6 கோடி 

மெர்சிடிஸ் G 63 AMG - ரூ. 2,17 கோடி 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.