இதுவரை 10 லட்சம் ஸ்விப்ட் டிசைர் கார்களை விற்றுள்ளது மாருதி சுசுகி

ஆல்டோ, ஸ்விப்ட் மற்றும் வேகன் ர கார்களின் வரிசையில் இப்போது ஸ்விப்ட் டிசைர் காரும் 10 லட்சம் என்ற மயில்கல்லை எட்டியுள்ளது. ஸ்விப்ட் டிசைர் கார் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திலேயே 1 லட்சம் கார்கள் விற்றது. அடுத்து இரு வருடங்களில் அதாவது 2013 ஆம் ஆண்டிற்குள் 5 லட்சம் கார்கள் விற்று தீர்ந்தது. 

வடிவத்திலும் செயல்திறனிலும் மிகவும் சிறப்பாக இருப்பதாலும் மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மாடலாகவும் இருப்பதாலும் விற்பனையில் தொடர்ந்து சாதித்து வருகிறது மாருதி சுசுகி - ஸ்விப்ட் டிசைர். இந்நிலையில் சமீபத்தில் 10 லட்சம் என்ற மயில்கல்லை எட்டியுள்ளது மாருதி சுசுகி - ஸ்விப்ட் டிசைர்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.