7 வது மாருதி சுசுகி டக்சின் டேர் ரேலி தொடங்கியது

7 வது மாருதி சுசுகி டக்சின் டேர் ரேலி நேற்று (ஆகஸ்ட் 2 ) பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் தொடங்கியது. இந்த போட்டி இறுதியாக ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முடிகிறது. 2015 ஆம் ஆண்டு மாருதி சுசுகி டக்சின் டேர் ரேலி போட்டியில் 40 சதவீதம் போட்டியாளர்கள் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக 105 குழுக்களுடன் சேர்த்து 170 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்த போட்டியில் போட்டியாளர்கள் 6 நாட்களில் தோரயமாக 2000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். பெங்களூரில் தொடங்கி இறுதியாக ஹைதராபாத்தை வந்தடைய வேண்டும். இந்த போட்டியில் என்டுரன்ஸ்,அல்டிமேட் கார் மற்றும் அல்டிமேட் பைக் என   மொத்தமாக மூன்று பிரிவுகளில் நடைபெறும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.