29.85 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது அபார்த் - 595 காம்படிசன்

ஃபியட் - அபார்த் 595 காம்படிசன் மாடல் 29.85 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இது ஃபியட் - அபார்த் 500 மாடலின் அதிக செயல்திறன் கொண்ட மாடல். 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஃபியட் நிறுவனத்தால் அபார்த் 595 மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஃபியட் நிறுவனம் அதிக திறன் மற்றும் செயல்திறன் கொண்ட மாடல்களை அபார்த் பிராண்டில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே அந்த வரிசையில் இன்று அபார்த் 595 காம்படிசன் மாடலை வெளியிடப்பட்டது.

இந்த மாடல் 160 bhp திறனும் 230 Nm இழுவைதிறனும் கொண்ட 1.4 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும்.இந்த கார் கிளாசிக் கார்களின் அடிப்படையில் புதிய நுணுக்கங்களை புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 7.4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடலில் அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தோல் இருக்கை என சகல விதமான சொகுசு வசதிகளும் உபகரணங்களும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் மினி கூபர் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.