மாருதி சுசுகி - S கிராஸ் மாடல் 8.34 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது.

மாருதி சுசுகி - S கிராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்  மாடல் 8.34 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் மாருதி சுசுகியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. நெக்ஸா ஷோரூம் என்பது மாருதியின் ப்ரீமியம் கார்களுக்கான பிரத்தியேகமான ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின்களில் மட்டும் கிடைக்கும். பெட்ரோல் என்ஜினில் இந்த மாடல் கிடைக்காது. மேலும் இந்த மாடல் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா  என 7 வேரியண்டுகளிலும் ப்ரௌன், ப்ளூ, சில்வர், வெள்ளை மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களிலும் கிடைக்கும்.

இதன் 1.3 லிட்டர் DDiS 200  டர்போ சார்ஜ்  டீசல்  என்ஜின்  90bhp திறனும் 200Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.மேலும் இந்த  மாடல் 23.65kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

இதன் 1.6 லிட்டர் DDiS 320  டர்போ சார்ஜ்  டீசல்  என்ஜின்  120bhp திறனும் 320Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.மேலும் இந்த  மாடல் 22.07kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், முன்புற பனி விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர், டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ ஆகியவையும் இந்த மாடலில் கிடைக்கும்.

வேரியன்ட் வாரியாக S கிராஸ் மாடலின் விலை 

சிக்மா  1.3 லிட்டர்      - ரூ. 8.34 லட்சம் 
டெல்டா  1.3 லிட்டர்  - ரூ. 9.15 லட்சம் 
ஜீட்டா  1.3 லிட்டர்     - ரூ. 9.99 லட்சம் 
ஆல்பா 1.3 லிட்டர்     - ரூ. 10.75லட்சம் 

டெல்டா  1.6 லிட்டர்  - ரூ. 11.99 லட்சம் 
ஜீட்டா  1.6 லிட்டர்     - ரூ. 12.99 லட்சம் 
ஆல்பா 1.6 லிட்டர்    - ரூ. 13.74 லட்சம் 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.