அதிக செயல்திறன் கொண்ட அபார்த் புண்டோ விரைவில்

ஃபியட் - அபார்த் 595 காம்படிசன் மாடல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து அபார்த் பிராண்டில் வரும் அக்டோபர் மாதம்  அபார்த் புண்டோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அபார்த் புண்டோ மாடல்  அதே 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். ஆனால் இதன் செயல்திறனை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 150 Bhp திறனையும் 200 Nm இழுவை திறனையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் அனைத்து வீலும் டிஸ்க் ப்ரேக் கொண்டதாக இருக்கும். மேலும் அதிக செயல்திறனுக்கு ஏற்றவாறு சஸ்பென்சன், கிரௌண்ட் கிளியரன்ஸ் ஆகியவை மாற்றப்படும். உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்டியாக தெரிய சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் வோல்க்ஸ் வேகன் - போலோ TSI மாடலுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் சிறந்த செயல்திறன் கொண்ட ஹட்ச் பேக் மாடலாகவும் விலை குறைந்த மாடலாகவும் இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.