செவ்ரொலெட் பீட் அடிப்படியிலான செடென் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்படும்

செவ்ரொலெட் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அடுத்த தலைமுறை பீட் மாடலையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செடென் மாடலையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து தலை முறை பீட் மாடல் இதுவரை இந்தியாவில் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு இரண்டு மாடலையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு மாடல்களும் அதிகபட்சம் ஒரே பாகங்களை கொண்டிருக்கும். இந்த மாடல்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் 1.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். 

இந்த செடென் மாடல் மாருதி சுசுகி - ஸ்விப்ட் டிசைர், ஹோண்டா - அமேஸ் மற்றும் ஹுண்டாய் - எக்ஸ்சென்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.