மாருதி சுசுகி YRA கான்செப்ட் மாடலின் பெயர் பலெனோ (Mauti Suzuki - Baleno)

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்ட YRA கான்செப்ட் மாடலின் பெயரை பலெனோ என்ற மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் செப்டம்பர் 15 ஆம் தேதி  ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பூஸ்டர் ஜெட் எனப்படும் புதிய எஞ்சின் பொருத்தப்படும் என ஏற்கனவே மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல் ஹுண்டாய் - எலைட் i 20 மற்றும் ஹோண்டா - ஜாஸ் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் மிக சிறப்பான வெளிப்புற தோற்றமும், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் LED பின்புற விளக்குகள் ஆகியவை தெளிவாக வெளிப்படுகிறது. இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

https://www.youtube.com/watch?v=gMmAyA_NqRg

மேலும் பலெனோ என்ற பெயரில் ஒரு  மாடலை 2000 ஆண்டு மத்தியில் ஏற்கனவே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.