முதலாமாண்டு ஹுண்டாய் - எலைட் i 20 ஆனிவெர்சரி எடிசன் (Elite i20 Anniversary Edition)

ஹுண்டாய் நிறுவனம், எலைட் i 20 மாடலை வெளியிட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக எலைட் i 20  ஆனிவெர்சரி எடிசன் (Elite i20 Anniversary Edition) மாடலை வெளியிடுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 6.84 லட்சம் மற்றும்  டீசல் மாடல் 7.99 லட்சம் ஷோரூம் விலையிலும் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் சில மாற்றங்களை செய்து ஆனிவெர்சரி எடிசன் மாடலாக வெளியிடுகிறது. மேலும் இந்த மாடல் வெறும் 600 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். 

இந்த  ஆனிவெர்சரி எடிசன் மாடலில் கூடுதலாக 2-டின் மியூசிக் சிஸ்டம், ப்ளூ டூத், 6 ஸ்பீக்கர் ஆகியவை கிடைக்கும். மேலும் சில ஷோ ரூம்களில் பொருத்தப்படும் மேட், இருக்கை கவர், பின்புற செல்ப் ஆகியவையும் கிடைக்கும். 

என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல் என்ஜினிலேயே   கிடைக்கும். 
இதன் பெட்ரோல் என்ஜின் 1197CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 117Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 19 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
 
இதன் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின்   மாடல் 23 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்   100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும்  டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார்  அதிக பட்சமாக மணிக்கு  160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.