49.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஆடி A6 (Audi A6)

49.5 லட்சம் ஷோரூம்  விலையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ஆடி ஆ6 மாடல் வெளியிடப்பட்டது .இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகப்பு மற்றும் பின்புற LED விளக்குகள் குறிப்பிட்டு கூறும்படியான மாற்றமாக சொல்லலாம்.  இந்த மாடலில் ஆடி நிறுவனத்தின் புதிய மேட்ரிக்ஸ் LED  முகப்பு விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய 8 இன்ச் கொண்ட MMi நேவிகேசன் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே  2.0 லிட்டர் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் இரண்டு என்ஜின் மாடலும் 7 ஸ்பீட் கொண்ட S  ட்ரானிக் ஆட்டோமேடிக் சிஸ்டத்துடன் கிடைக்கும். 

மேலும் இந்த மாடல் BMW 5 சீரீஸ், மெர்சிடெஸ் பென்ஸ் E கிளாஸ் மற்றும் ஜகுவார் XF  ஆகிய மாடலுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.