ஆடி e - ட்ரான் குவாட்ரோ எலெக்ட்ரிக் காரின் வரைபடம் வெளியிடப்பட்டது

முழுமையான எலெக்ட்ரிக் காரான e - ட்ரான் குவாட்ரோ காரின் வரைபடத்தை வெளியிட்டது ஆடி நிறுவனம். மேலும் இதன் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த மாதம் நடக்கும் பிரான்க் புர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த மாடல் ஒரு முழுமையான மற்றும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த மாடலில் முன்புற அச்சில் ஒரு மோட்டார் பின்புற அச்சில் இரண்டு மோட்டார்  மூன்று எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின்  ஏரோடைனமிக் வடிவத்தில் அதிக கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடி e - ட்ரான் குவாட்ரோ எலெக்ட்ரிக் கார் மாடல் 2018 ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.