5800 ஜகுவார் மற்றும் லேன்ட் ரோவர் கார்கள் சீன வெடி விபத்தில் நாசமடைந்தது

சமீபத்தில் சைனாவில் உள்ள டியான்ஜின் துறைமுகத்தில் நடந்த ரசாயன வெடிவிபத்தில் 5800 ஜகுவார் மற்றும் லேன்ட் ரோவர் கார்கள் சேதமடைந்துள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

டியான்ஜின் துறைமுகத்தில் 5800 ஜகுவார் மற்றும் லேன்ட் ரோவர் கார்கள் விநியோகிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.  ரசாயன வெடிவிபத்து நடந்ததால் அந்த 5800 கார்களும் நாசமடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது  யாரும் துறைமுகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படாததால் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்பது பற்றி தெளிவாக கூற முடியாது என்றும் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பிறகு தெளிவான தகவல்கள் வெளியிடப்படும் என டாடா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் விபத்து நடந்த அன்று  டியான்ஜின் துறைமுகத்தில் ரெனால்ட்,மிட்சுபிஷி, ஹுண்டாய், வோல்க்ஸ் வேகன், கியா, ஜகுவார் மற்றும் லேன்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 15000 கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இவை அனைத்தும் சேதமடைந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் இந்திய மதிப்பில் 6500 கோடிகள் இருக்கும்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.