சுசுகி im-4 (Suzuki im-4) கான்செப்ட் மாடலின் பேடன்ட் படங்கள் கசிந்தது

சுசுகி im 4 கான்செப்ட் மாடலின் பேடன்ட் படங்கள் இணையத்தில் கசிந்தது. இந்த படங்கள் தயாரிப்பு நிலை மாடல் போல் தோற்றமளிக்கிறது. கான்செப்ட் மாடலில் இருந்து சில மாற்றங்கள் இந்த படத்தில் காணப்படுகிறது. 

குறிப்பாக முன்புற முகப்பு விளக்குகள், டயர்கள், பின்புற கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்லர், பக்கவாட்டு கண்ணாடிகள் ஆகியவை கான்செப்ட் மாடலில் இருந்து இந்த பேடன்ட் படங்களில் மாறுபட்டுள்ளது. இவை அனைத்தும் தயாரிப்பு நிலைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 5 லட்சம் விலைக்குள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.