2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: டட்சன் கோ - கிராஸ் மாடல் வெளிப்படுத்தப்பட்டது

டட்சன் நிறுவனம் கோ - கிராஸ் எனும் புதிய கான்செப்ட் மாடலை 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது. இது டட்சன் கோ மற்றும் கோ + கான்செப்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் ஆகும். 

டட்சன் கோ மற்றும் கோ + மாடலை விட சிறப்பான தோற்றமும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கிராஸ் ஓவர் மாடல்களில் உள்ள அணைத்து அம்சமும் இதிலும் உள்ளது. பெரிய முகப்பு கிரில், LED முகப்பு விளக்குகள் பிளாஸ்டிக் கிளடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜின் தொடர்பான எந்த ஒரு விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால் கோ மற்றும் கோ + மாடலில் உள்ள தி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டட்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு மாடல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.