2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: ஹோண்டா FCV ஹைட்ரோஜன் கார் காட்சிப்படுத்தப்பட்டது

 ஹோண்டா நிறுவனம் FCV ஹைட்ரோஜன் மாடலை டோக்யோ மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் FCX கிளாரிட்டி புயெல் செல் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹைட்ரோஜென்  கார் ஆகும். இந்த மாடல் ஹைட்ரோஜென் வாயு மூலம் இயங்கும். 

இந்த  ஹைட்ரோஜென் வாயு புயெல் செல்லிற்குள் செலுத்தப்படும் இந்த வாயு புயெல் செல்லில் வேதியியல் வினை மூலம் எலெக்ட்ரிக் திறனை உருவாக்கும். இந்த எலெக்ட்ரிக் திறன் ஒரு பேட்டரியில் சேமிக்கப்படும். இந்த பேட்டரி மூலம் மின் மோட்டார்கள் இயங்கும்.

இந்த மாடல் ஒரு முறை முழுமையாக  ஹைட்ரோஜென் வாயுவை நிரப்பினால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் இந்த மாடல்  FCX கிளாரிட்டி மாடலை விட 30 சதவீதம் சிறியதாகவும் 60 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.