2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: அனைவரையும் கவர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் விசன் டோக்யோ தானியங்கி கார்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் எதிர்காலத்திற்கான விசன் டோக்யோ என்ற தானியங்கி காரை காட்சிப்படுத்தியது. இந்த கார் வேன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை சுற்றிலும் ப்ளூ வண்ணத்திலான நியான் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பார்பதற்கு மிக சாதாரணமாக தோன்றினாலும். தொழில் நுட்பத்தில் எதிர்காலத்தை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்கு 3 D ஹாலோக்ராம் மல்டி மீடியா கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரவிருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத மாடலில் ஹைட்ரோஜன் பூயல் செல் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 650 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.