2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: IDS கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது நிசான்

நிசான் நிறுவனம் IDS கான்செப்ட் மாடலை 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த மாடல் முழுமையான தானியங்கி கார் ஆகும். மேலும் இது சுத்தமாக மாசுவையே வெளியிடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலை நிசான் நிறுவனம் வருங்கால தொழில்நுட்பம் என்பதன் தலைப்பில் வெளிப்படுத்தியது.

இந்த மாடல் பைலட் டிரைவ் மற்றும் மேனுவல் டிரைவ் என இரண்டு வித டிரைவ் ஆப்சன்கள் கொண்டது. ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் இதன் டிரைவ் ஆப்சனை மாற்ற முடியும். மேலும் இந்த மாடலை  பைலட் டிரைவ் மோடில் இருக்கும் பொது முன்புற இருக்கையை சுழற்றி பின்புற்ற இருக்கையை நோக்கியவாறு மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் இந்த மாடல் மேனுவல் டிரைவில் இருக்கும் போதும் IDS தொழில்நுட்பம் இயங்கி கொண்டு தான் இருக்கும். எதிர்பாராது தடுப்புகள் வரும் போது தானாகவே கார் இயங்க ஆரம்பித்துவிடும். மேலும் இதன் வெளிப்புற தோற்றமும் ஏரோ டைனமிக் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக எதிர்கால வடிவத்தை அடிப்படையாக கொண்டு முழுவதுமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.