வெளிப்படுத்தப்பட்டது 2016 புகாட்டி சிரோன் ஹைபர் கார்

புகாட்டி நிறுவனம் சிரோன் ஹைபர் காரை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. இது புகாட்டி வேய்ரோன் மற்றும் புகாட்டி விசன் க்ராண்ட் டூரிஸ்மோ  ஆகிய மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த மாடலின் செயல்திறனை கேட்டல் தான் மலைக்கும் அளவிற்கு உள்ளது நீங்களும் இந்த மாடலின் விவரங்களை படித்து பாருங்கள் தெரியும்.

புகாட்டி வேய்ரோன் மாடலில் உள்ள 8.0 லிட்டர் V16 என்ஜினில் அதிக செயல்திறனை வழங்கும் அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த புகாட்டி சிரோன்  மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 1479 Bhp  திறனையும் 1600 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில்  ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஆட்டோமேடிக் கியர் பாக்சும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.5 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலும், 200 கிலோமீட்டர் வேகத்தை 6.5 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலும் மற்றும் 300 கிலோமீட்டர் வேகத்தை 14 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலும் கடக்கும் வல்லமை கொண்டது. இன்னும் இருக்கிறது பொறுங்கள் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 420 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த காரை இந்தியாவில் யாரேனும் வாங்கினாலும் இந்த வேகத்தில் செல்ல சாலைகள் தான் இல்லை. இந்த மாடல் 2 டன் எடை கொண்டது.

வடிவமைப்பு பற்றி ஏதும் சொல்ல தேவையில்லை படத்தை பார்த்தல் உங்களுக்கே புரியும் அந்த அளவுக்கு பார்த்த உடனே கவரும் வடிவமைப்பு. மேலும் இந்த மாடலின் ஐந்து டிரைவ் ஆப்சன்கள் உள்ளது. இந்த மாடல் வெறும் 500 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் ஏற்கனவே 150 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.