2016 டெல்லி வாகன கண்காட்சி: ரூ.2.47 கோடி விலையில் வெளியிடப்பட்டது ஆடி R8

ஆடி நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் ரூ.2.47 கோடி டெல்லி ஷோ ரூம் விலையில்  ஸ்போர்ட் கூப் காரை வெளியிட்டது. இது R8 காரின் இரண்டாம்  தலை முறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் புதிய LED விளக்குகள், புதிய கிரில் மற்றும் புதிய air இண்டேக்குகள் என நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் இலகு எடை கொண்ட அலுமினியம் கார்பன் பைபர் பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இதன் செயல் திறன் அதிகமாக இருக்கும்.

இந்த மாடலில் 5.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 610 Bhp திறனை வழங்கும். இந்த மாடலில் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும்  பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.