2016 டெல்லி வாகன கண்காட்சி: இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW 7 சீரீஸ், X1 மற்றும் X5 ஸ்பெஷல் எடிசன்

BMW நிறுவனம் 2016 டெல்லி வாகன டெல்லி கண்காட்சியில் 7 சீரீஸ் மாடலை ரூ.1.11 கோடி ஆரம்ப விலையிலும், X5 ஸ்பெஷல் எடிசன் மாடலை ரூ.75.9 லட்சம் ஆரம்ப விலையிலும்   மற்றும் X1 மாடலை ரூ.29.9 லட்சம் ஆரம்ப விலையிலும் வெளியிட்டது. இந்த விலை டெல்லி ஷோ ரூம் விலை ஆகும்.

BMW 7 சீரீஸ் மாடல் டீஸல் மற்றும் பெட்ரோல் என இரண்டு எஞ்சின்களிலும் கிடைக்கும். இந்த மாடல் 730d எனும் டீசல் எஞ்சினிலும் 750i பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும். வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்.
730Ld Design Pure Excellence - Rs 1,11,00,000
730Ld M Sport - Rs 1,19,00,000
730Ld Design Pure Excellence (CBU) - Rs 1,40,00,000
750Li Design Pure Excellence (CBU) - Rs 1,50,00,000
750Li M Sport (CBU) - Rs 1,55,00,000 

BMW X1 மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இந்த எஞ்சின் 190 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் அதிகமாக X3 மாடலின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம். 
X1 Expedition sDrive20d - Rs 29,90,000
X1 xLine sDrive20d - Rs 33,90,000
X1 xLine xDrive20d - Rs 35,90,000
X1 M Sport xDrive20d - Rs 39,90,000

BMW X5 மாடலின் சிறப்பு பதிப்பு மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 258 Bhp திறனையும் 560 நம் இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் BMW X5 மற்றும் BMW X5 M மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.